முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

டெல்லி, நவ.20 - பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து  தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்டிபரூதின், அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் குறித்து இந்தியா கவலை கொள்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். இருதரப்பும் தாமதமின்றி நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

இந்தியா தலைமையில் கடந்த 14-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்த வலியுறுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக இந்தியா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 55 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி ஜபாரியும் உயிரிழந்தார். இந்த தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகமும் ஆதரவு தொலைக்காட்சி நிலையமும் நிர்மூலமாக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்