முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்ற தீப திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ. 20 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமுஷனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீப திருவிழா ஆகும். இத்திருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை பூஜை, வாஸ்து சசார்தி பூஜைகள் நடந்தது. கொடியேற்த்தை முன்னிட்டு நேற்று காலை  உற்சசவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து, சசர்வ அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தல் கொடிக்கம்முன்பு எழுந்தருளினர். அங்கு கொடி கம்பத்தின்கீழ் 12 செசாம்புகளில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 16 மீட்டர் உயரம் கொண்ட கொடிச் சேசலையினை சிவசசாச்சசார்யார்கள், கொடிக்கம்பத்தில் எற்றி, கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றினர். தொடர்ந்து, கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில், புனிதநீர் மற்றும் பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து, மகா துஷப தீபாராதனைகள் நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு தினம் காலையில் தங்கமயில், தங்க சசப்பரம், சசப்பரம், விடையாத்தி சசப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேசஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், ரத்ன சிம்மாசசனம், தங்க குதிரை ஆகிண வாகனங்களில் தினம் ஒன்றில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நவ.24ம்தேதி சசனிக்கிழமை சைசவ சசமய ஸ்தாபித வரலாற்று லீலையும், நவ. 26ம்தேதி பட்டாபிஷேகமும், நவ. 27ம்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலைமேல் திருக்கார்த்திகை மகா தீபமும் அதனைத் தொடர்ந்து, 16கால் மண்டபம் அருகில் செசாக்கப்பான் தீபக் காட்சியும் நடைபெறும். திருவிழாவின் உச்சச நிகழ்ச்சியாக நவ. 28ம்தேதி சுவாமி தீர்தத் உற்வம் நடக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்