முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாதத்திற்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

நாசா, நவ.20 - இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாத ஆய்வுக்கு பிறகு நேற்று பூமிக்கு திரும்பினார். அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(47).  நாசா விஞ்ஞானியான அவர் முதன்முறையாக கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி விண்வெளிக்கு சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணியாற்றிய அவர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி பூமி திரும்பினார். 

சுனிதா மற்றும் அவருடன் சென்ற 2 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 127 நாட்கள் தங்கிய பிறகு நேற்று காலை பூமியை வந்தடைந்தனர். அமெரிக்காவின் விண்கலமான ஷட்டில் கலன்கள் இப்போது உபயோகத்தில் இல்லை என்பதால், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் இவர்கள் நேற்று பூமிக்குத் திரும்பினர். கஜகிஸ்தான் நாட்டில் இவர்கள் தரையிறங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்