திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் நீக்கம்

ஞாயிற்றுக் கிழமை, 4 டிசம்பர் 2016      தமிழகம்
Jaya-Correct(C) 58

 

சென்னை, நவ.20 - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்ட நெல்லை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர்கள்  2பேரை கட்சியின் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கட்சியைவிட்டு நீக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.கவின் கொள்கை -குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.கவின்  கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அ.தி.மு.க  கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட  காரணத்தினாலும், திருநெல்வேலி மாநகர் மாவட்டைச்  சேர்ந்த அண்ணாமலை (மேலப்பாளையம் பகுதிக் கழக அவைத் தலைவர்)

அ.பெரியதுரை (19 - வது வட்டக் கழகச் செயலாளர்)

ஆகியோர் இன்று முதல்  அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது  எனக் கேட்டுக் கொள்கிறேன்.