முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் - இந்தியா 9 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், நவ. 20 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அகம தாபாத் நகரில் நடைபெற்ற முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தத் தொடரி ல் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், புஜாரா இரட்டை சதமும், சேவா க் சதமும் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கப லமாக யுவராஜ் சிங் மற்றும் காம்பீர் ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளர்களான ஓஜா மற்றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி னர். அவர்களுக்கு ஆதரவாக உமேஷ் யாதவ் மற்றும் ஜாஹிர்கான் ஆகியோர் பந்து வீசினர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் கடந்த 15 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடி வடைந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி இங்கிலாந்து பந் து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிர மாண்ட ஸ்கோரை எட்டியது. 

இந்திய அணி தரப்பில் புஜாரா அபார மாக பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகு ம். அவர் 389 பந்தில் 206 ரன்னை எடுத் து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதி ல் 21 பவுண்டரி அடக்கம். 

துவக்க வீரரான சேவாக் 117 பந்தில் 117 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யுவராஜ் சிங் 151 பந்தில் 74 ரன்னையும், காம்பீர் 111 பந்தில் 45 ரன்னையும், அஸ்வின் 23 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கி லாந்து அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் அந்த அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 191 ரன்னில் சுருண்டது . 

அந்த அணி சார்பில் கீப்பர் பிரையர் அதிகபட்சமகா, 100 பந்தில் 48 ரன் எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். கேப்டன் குக் 109 பந்தில் 41 ரன் எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம்.  தவி ர, பிராட் 25 ரன்னும், பிரஸ்னன் 19 ரன் னும், பீட்டர்சன் 17 ரன்னும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனதால் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் முதல் இன்னிங்சை போல அல்லாமல் 2- வது இன்னிங்சில் அந்த அணி சற்று போராடியது. 

இறுதியில் இங்கிலாந்து அணி 5-வது நாளன்று 2 - வது இன்னிங்சில், 154.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 406 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்திய அணி இந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங் சில் கேப்டன் குக் மற்றும் கீப்பர் பிரை யர் இருவரும் நிலைத்து நின்று ஆடி இந்திய பெளலர்களுக்கு சிரமத்தை அளித் தனர். 

கேப்டன் குக் அதிகபட்சமாக, 374 பந்தி ல் 176 ரன் எடுத்தார். இதில் 21 பவுண்ட ரி அடக்கம். கீப்பர் பிரையர் 225 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, காம்ப்டன் 37 ரன்னையும், பெல் 22 ரன்னையும், பிரஸ்னன் 20 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா 120 ரன்னைக்  கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 70 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர் கான் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி முன்னதாக 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன் னிங்சில், 128 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 340 ரன்னை எடுத்து இருந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. அப்போது குக் 168 ரன்னுட னும், பிரை யர் 84 ரன்னுடனும் களத்தி ல் இருந்தனர். 

5- வது நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

ஓஜா நேற்று காலை சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளான குக் மற்றும் பிரையர் இருவரையும் வீழ்த்தி னார். அதன் பின்பு ஜாஹிர்கான், அஸ் வின் மற்றும் உமேஷ் யாதவ் மூவரும் மற்ற வீரர் களை அவுட்டாக்கினர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 77 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு வைக்கப்பட்டது. பின்பு கள ம் இறங்கிய இந்திய அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்னை எடு த்தது. புஜாரா 51 பந்தில் 41 ரன்னை எடு த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 21 பந்தில் 14 ரன்னுடன் களத் தில் இருந்தார். சேவாக் 21 பந்தில் 25 ரன் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago