முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுஷ்கா நடிக்கும் ``பத்ரா''

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்,14 - குருபிரம்மா ஆர்ட்ஸ் எனும் புதிய நிறுவனம் ``பத்ரா'' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளிவரும் நிலையில் உள்ளது. இப்படம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்து வெளியான ``கலேஜா'' படம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக மகேஷ்பாபு, கதாநாயகியாக அனுஷ்கா நடிக்க, பிரகாஷ்ராஜ், கோட்ட சீனிவாசராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் விக்ரம் சீனிவாஸ் மகேஷ்பாபு நடித்து தமிழில் வெளியான நந்து படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் பிற மாநிலங்களான ராஜஸ்தான், ஒரிசா, அஸ்ஸாம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை வரையில் விலையுயர்ந்த இரிடியம் பூமிக்கடியில் கோடிக்கணக்கான டன்கள் குவிந்துள்ளது. இதை மோப்பம் பிடித்த ஒரு கும்பல் கொள்ளையடிக்க புறப்படுகிறது. இந்த செய்தி அரசாங்கத்திற்கும், மீடியாவிற்கும் தெரியாமல் இருக்க நயவஞ்சகமாக அபகரிக்க அங்கு ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையை கட்டியது. இடையூறாக இருக்கும் அங்குள்ள கிராமத்து மக்களை விரட்ட தொழிற்சாலையில் வெளியாகும் விஷக் கழிவுகளை நீர் நிலையில் கலந்து விடுவதால் கிராம மக்களும், கால்நடைகளும் கொத்து கொத்தாக மடிகின்றனர். காரணம் தெரியாமல் சாகும் மக்கள் தங்களை காப்பாற்ற கடவுள்தான் வர வேண்டும் என நம்பும் வேளையில், ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கதாநாயகன் கிராமத்திற்கு வருகிறான். பின்பு அங்கு நடக்கும் குற்றங்களையும், அக்கிரமங்களையும் தடுத்து நிறுத்தி அவர்களை வென்று கிராம மக்களை காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதை.   

இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், ஆந்திரா, சட்டீஸ்கர், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பும் லண்டன், ஸ்விட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் பாடல் காட்சிகளும் படமாக்கப்படுகிறது. இதில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறது. இப்பாடல்களை கவிஞர் முத்துலிங்கம், கருணாநிதி, பிரகலாதன், ஜெயமுரசு மற்றும் பத்திரிகையாளர் கார்கோ எழுதியுள்ளார். எல்லா கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இப்படம் மே மாதம் திரையிடப்படுகிறது. 

இயக்கம்- விக்ரம் சீனிவாஸ், இசை- மணிவர்மா, ஒளிப்பதிவு- யாஷ் பட், வசனம்- ஏ.ஆர்.கே.ராஜராஜா, தமிழாக்க ஒருங்கிணைப்பு- விருசாதாசலம் பிரகாஷ், இணைத் தயாரிப்பு- பிரசாத் ராவ் ஏ.வெங்கட், தயாரிப்பு- பிரபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்