முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்சரண் தேஜா- காஜல் அகர்வால் நடிக்கும் ``மாவீரன்''

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்,14 - ரஜினிகாந்த்- அமலா நடிப்பில் 1989-ம் ஆண்டு மாப்பிள்ளை எனும் எனும் மாபெரும் வெற்றிப் படத்தை கீதா ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் 21 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா- காஜல் அகர்வால் நடிக்க ``மாவீரன்' எனும் திரைப்படத்தை மிகுந்த பொருட் செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. 

இப்படம் மரியாதை ராமன்னா, எமதொங்க, விக்ரமார்கடு, சத்ரபதி ஆகிய தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகத்ரா என்ற பெயரில் உலகமெங்கும் தெலுங்கில் வெளியாகி மொத்தம் 450 பிரிண்டுகள்  போடப்பட்டு 1,200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களுக்கும் கே.பாலசந்தரின் 47 நாட்கள், ரஜினியின் ராணுவ வீரன், மாப்பிள்ளை படங்கள் மூலம் நன்கு அறிமுகமான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் தேஜாவை தமிழில் அறிமுகப்படுத்தும் வகையில் மகத்ரா எனும் வெற்றிப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் மாற்றம் செய்து முக்கிய பகுதிகளை படமாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago