மியான்மருக்கு ஆதரவு: ஒபாமா உறுதி

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

யாங்கூன், நவ.21 - ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய மியான்மருக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். ராணுவ ஆட்சி நிகழ்ந்த மியான்மரில், இப்போது படிப்படியாக ஜனநாயகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மியான்மர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. யாங்கூன் பல்கலைக்கழகத்தில் ​திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒபாமா பேசியதாவது: ாஅமெரிக்கா உங்களுக்கு  (மியான்மருக்கு) ஆதரவாக இருக்கிறது. மியான்மரின் புதிய நிர்வாகம், ஜனநாயகத்தை முன்னெடுத்துச்  செல்ல வேண்டும். தவறினால், அமெரிக்காவின்  ஆதரவு கிடைக்காது. இப்போது இங்கு காணப்படும் வளர்ச்சிக்கான முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்ா என்றார் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சான் சூச்சியை அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒபாமா முன்னதாக மியான்மர் அதிபர் தெய்ன் செயினை சந்தித்த ஒபாமா, ா(மாற்றத்துக்கான) பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.  மியான்மர் அதிபர் மேற்கொண்டுவரும் ஜனநாயக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் சிறந்த பலனை அளிக்கும்; புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் ா என்றார். ஒபாமாவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மியான்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.கம்போடியாவில் நடைபெறவுள்ள கிழக்காசிய நாடுகள் மாநாட்டில் ஒபாமா செவ்வாய்க்கிழமை பங்கேற்கிறார். அதற்கு முன்னதாக தாய்லாந்திலும், மியான்மரிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அரசியல் கைதிகள் உள்ளிட்ட 66 பேரை மியான்மர் அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது. இவர்களில் பெரும்பாலானோர் மனித உரிமைப் போராளிகள், நல்லெண்ண அடிப்படையில் அக்கைதிகளை விடுதலை செய்ததாக அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: