முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 14 -  இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென் னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கி ய வல்தாட்டி அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். திணேஷ் கார்த்திக், சன்னி சிங் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான பிரவீன் குமார் நன்கு பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி னார். தவிர, ஹாரிஸ் மற்றும் சாவ்லா ஆகியோர் அவருக்குப் பக்கப லமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியின் 9 -வது லீக் ஆட்டம் சண்டிகாரில் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், அனிருதா மற்றும் முரளி விஜய் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். அந்த அணி இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்னை எடுத்தது. 

சென்னை அணி கணக்கைத் துவக்குவதற்கு முன்பாக, அனிருதா மற் றும் ரெய்னா இருவரும் ஆட்டம் இழந்தனர். பின்பு முரளி மற்றும் பத் ரிநாத் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

துவக்க வீரர் முரளி அதிகபட்சமாக 43 பந்தில் 74 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் சாவ் லா வீசிய பந்தில் கீப்பர் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து ரெளியேறி னார். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய பத்ரிநாத் 56 பந்தில் 66 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் தோனி 20 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

பஞ்சாப் அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரவீன் குமார் 37 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹாரிஸ் மற்றும் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

பஞ்சாப் அணி 189 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை சென்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்னை எடுத்தது. 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 5 பந்து மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த லீக்கில் அபார வெற்றி பெற்றது. இத ன் மூலம் அந்த அணிக்கு 2  புள்ளிகள் கிடைத்தது. பஞ்சாப் முதல் ஆட்டத்தில் புனே அணியிடம் தோற்றது. தற்போது 2 -வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

பஞ்சாப் அணி தரப்பில், துவக்க வீரர் வல்தாட்டி அதிரடியாக ஆடி, 63 பந்தில் 120 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, கில்கிறிஸ்ட் 19 ரன்னையும், சன்னி சிங் 20 ரன்னையும், கார்த்திக் 21 ரன்னையும், எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், செளதீ 33 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தார். தவிர, மார்கெல் மற்றும் ரன்டிவ் ஆகியோர் தலா ஒரு விக் கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வல்தாட்டி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்