முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - ராஜஸ்தான் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், ஏப். 14 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாச த்தில் டெல்லிடேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், டிராவிட், போத்தா, மெனேரியா, ரகானே மற்றும் டெய்லர் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர் ஷான் டெ ய்ட் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இருவரும் இணைந் து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர். திரிவேதி மற்றும் ஏ. சிங் இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். 20 - க்கு 20 போட்டியின் 7 -வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் நடந்தது. இதில் கேப்டன் சேவாக் தலைமையிலான டெல்லி அணியும், வார்னே தலைமையிலான ராஜ ஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில் சேவாக் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந் தனர். 

டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வேணுகோபால் ராவ் அதிகபட்சமாக, 40 பந்தில் 60 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் திரிவேதி வீசிய பந்தி ல் வார்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக துவக்க வீரர் வார்னர் 44 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில், அவர் சிங் வீசிய பந்தில் ரவுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தவிர, பிஞ்ச் 11 ரன்னையும், இர்பான் பதான் 9 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஷா ன் டெய்ட் 40 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். சுழற் பந்து ஜாம்பவானான ஷேன் வார்னே 17 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஏ. சிங் மற்றும் திரிவேதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந் த அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்னை எடுத்தது. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெ ட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய டிராவிட் 31 பந் தில் 38 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். போத்தா 32 பந்தில் 39 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக் காமல் இருந்தார். தவிர, மெனேரியா 15 பந்தில் 22 ரன்னையும், ரகா னே 17 பந்தில் 18 ரன்னையும், டெய்லர் 18 ரன்னையும் எடுத்தனர். 

டெல்லி அணி சார்பில், மார்கெல் 11 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, டின்டா, பதான் மற்றும் வான் டெர் மெர்வே ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக வார்னே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago