கசாப் ஒரு ஹீரோவாம்! லஷ்கர் அமைப்பு சொல்கிறது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ. 22 - பாகிஸ்தான் தீவிரவாதியான கசாப் ஒரு ஹீரோ என்றும், அவரது மரணம் மேலும் பல தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கும் என்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த கசாபுக்கு மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். கசாபை தூக்கிலிட்ட சில மணிநேரத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த கமாண்டர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போன் செய்துள்ளார். அவர் கூறுகையில், 

கசாப் ஒரு ஹீரோ. அவரது பாதையை பலர் பின்பற்றுவார்கள். அவரது தூக்கு தண்டனை மேலும் பல தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளான். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் உள்ள பல்வேறு இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 166 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: