முக்கிய செய்திகள்

போடி தொகுதியில் 80 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
bodi

 

போடி,ஏப்.14 - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 243 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் ஆண் வாக்காளர்கள் 10,3313 ,பெண்வாக்காளர்கள் 1,02,968 பேருக்கு ஆக மொத்தம் 2,06,281 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 243 வாக்குசாவடிகளில் மலைகிராமங்களை சேர்ந்த 10 வாக்குச்சாவடிகள் தவிர்த்து 79.61 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.இதில் ஆண் வாக்காளர்கள் 80,969 ,பெண்வாக்காளர்கள் 33,260-ம் சேர்த்து 1,64,229 வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்களித்த பொதுமக்கள் கூறும் போது: ஆட்சி மாற்றம் தேவை என்று கூறிய பொதுமக்கள்  இந்த முறை அதிமுக ஆட்சி தான் அமோக வெற்றி பெறும் . கடந்த ஐந்தாண்டுகளில் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் ஒரு பலன் வரும் என்பது போல அதிமுக ஆட்சி அமையும் .தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்டரம் ஊழல்,மின்தடை ,விலை வாசி உயர்வு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட அதிமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நோக்கில் எங்கள் வாக்கை போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தான் போட்டுள்ளோம் என்று வாக்களித்த பொதுமக்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: