பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் திடீர் மரணம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      தமிழகம்
Malaysia Vasudevan2

 

சென்னை, பிப்.21- பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் திடீரென மரணமடைந்தார்.

16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல்மூலம் தமிழகத்தின் பல இடங்களில் பிரபலமானவர் சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன். இவர் தொடர்ந்து பல திரைப்படப்பாடல்கள் பாடியுள்ளார். வில்லனாகவும், குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1.15 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் சாலிகிராமம் கம்பர் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது. மலேசியாவில் பிறந்த இவர் சினிமாவில் பாடுவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். 

டெல்லி டூ மெட்ராஸ் படம் மூலம் பாடகராக அறிமுகம் ஆன இவர் 8 ஆயிரம் தமிழ்பாடல்களும், பிரமொழிகளில் 4 ஆயிரம் பாடல்களையும் பாடியுள்ளார். இவரது மகன் யுகேந்திரன், மகள் நிஷாத்தினி ஆகியோரும் பின்னணி பாடகர்களாக உள்ளனர். இவரது இழப்பு பின்னணி பாடகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: