முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: ஆஸ்தி., முதல் இன்னிங்சில் 550 ரன்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, நவ. 24 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடந்து வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட்  போட்டியில் ஆஸ் திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 550 ரன்னை எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னி ங்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இர ட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். தவிர, மைக் ஹஸ்சே மற் றும் வார்னர் ஆகியோரும் சதம் அடித் தனர். இதனால் அந்த அணி பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 67 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்னை எடுத்து உள்ளது. அந்த அணி தற்போது 333 ரன் பின் தங்கிய நிலையில் உள்ளது. 

தெ.ஆ. அணியின் முதல் இன்னிங்சில் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தது 2- வது நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, துவக்க வீரர் பீட்டர்சென் அரை சதம் அடித்தார். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத் துக் கொடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 86.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்னை எடுத்து  இருந் தது. அப்போது கிளார்க் 224 ரன்னுடன் களத்தில் இருந்தார். 

2- வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் 68 ரன் சேர் த்த நிலையில் அனைத்து விக்கெட்டை யும் இழந்து 550 ரன்னில் அவுட்டானது. 

கேப்டன் கிளார்க் 257 பந்தில் 230 ரன் எடுத்த நிலையில் மார்கெல் வீசிய பந் தில் கிளீன் போல்டானார். இதில் 40 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

ஹஸ்சே 137 பந்தில் 103 ரன் எடுத்தார். தவிர, பட்டின்சன் 35 பந்தில் 42 ரன்னைஎடுத்தார். 

தெ. ஆ. அணி சார்பில், மார்கெல் 146 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். தவிர, ஸ்டெயின் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட்டும், கிளெயின் வெல் ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

தெ. ஆ. அணியின் இன்னிங்சில் கேப்ட ன் ஸ்மித் 220 பந்தில் 111 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 12 பவுண்டரி அட க்கம். 

மற்றொரு துவக்க வீரரான பீட்டர்சென் 112 பந்தில் 54 ரன்னை எடுத்த நிலையி ல் ரன் அவுட்டனார். இதில் 7 பவுண்டரி அடக்கம். 

4- வது வீரராக இறங்கிய ருடால்ப் 48 பந்தில் 25 ரன்னுடன் கேப்டனுடன் இணைந்து ஆடி வருகிறார். இதில் 2 பவுண்டரி அடக்கம். அம்லா 26 பந்தில் 11 ரன்னில் அவுட்டானார். 

முன்னதாக கேப்டன் ஸ்மித்தும், பீட்ட ர்சென்னும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 138 ரன் சேர்த்தனர். பின்பு அம் லாவுடன் இணைந்து ஸ்மித் 2- வது விக் கெட்டிற்கு 31 ரன் சேர்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago