முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்-14 - மதுரை மாவட்டத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் துணை ராணுவ பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கே வாக்காளர்கள் குவிய தொடங்கினர். பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கே மதுரை மாவட்டத்தில் 19.4 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. நேரம் ஆக, ஆக வாக்காளர்கள் அதிகமாக வரத்தொடங்கினர். மதியம் 1 மணி நிலவரப்படி 40. 9 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. காலையில் வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து மதியத்திற்கு மேல் வாக்களித்தனர். மாலை 3 மணி நிலவரப்படி57.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இறுதி நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளின் வாக்கு பதிவு சதவீதத்தின் விவரம் வருமாறு, மேலூர் - 80 சதவீதம், மதுரை கிழக்கு - 76.4 சதவீதம், சோழவந்தான்- 75 சதவீதம், மதுரை வடக்கு - 67.57சதவீதம், தெற்கு - 75 சதவீதம், மத்தி - 73.74 சதவீதம், மேற்கு - 74.7 சதவீதம், திருப்பரங்குன்றம் - 76.3 சதவீதம், திருமங்கலம் - 82 சதவீதம், உசிலம்பட்டி - 77 சதவீதம் ஆகும். இந்த தகவலை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான உ.சகாயம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, மதுரை மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்று உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துள்கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்