முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன்கோவில் முன்னாள் தக்கார் சிதம்பரம் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,நவ.25 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம் நேற்று மதுரையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.    சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம்(76) இவர் மதுரை மீனாட்சிஅம்மன்கோவில் தக்காராவும் இருந்தார். இவர் மதுரைசின்னசொக்கிகுளத்தில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வி.என்.சிதம்பரத்திற்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை வி.என்.சிதம்பரத்தின் உடல்நிலை  மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார். அவருக்கு கமலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    மீனாட்சி மைந்தன் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் வி.என்.சிதம்பரம் நடிகர் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர் ஆவார். அதன் காரணமாக சிவாஜிக்கு மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகே வெண்கல சிலையை வி.என்.சிதம்பரம் நிறுவினார். மறைந்த வி.என்.சிதம்பரத்தின் உடல் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவு துறைஅமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நேரில் வந்து வி.என்.சிதம்பரம் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜனதாதள செயலாளர் ஜான்மோசஸ் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட பிரமுகர்கள், மீனாட்சிஅம்மன் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து  அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான ராங்கியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்