மகள்களுடன் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் போன ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

ஆர்லிங்டன், நவ. - 26 - மகள்கள் மலியா மற்றும் சாஷாவுடன் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் மேற்கொண்ட அதிபர் பராக் ஒபாமா, கை நிறைய குழந்தைகள் புத்தகங்களை வாங்கினார். அவற்றை தனது மகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக அவர் கொடுக்கவுள்ளாராம். ஆர்லிங்டன் நகரில் உள்ள ஒன் மோர் பேஜ் புக்ஸ் என்ற புக் ஸ்டோருக்கு தனது மகள்களுடன் திடீரென ஷாப்பிங் வந்தார் ஒபாமா. அங்கு சிறிது நேரத்தை செலவிட்ட ஒபாமா, புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கினார். மொத்தம் 15 குழந்தைகள் புத்தகங்களை அவர் வாங்கினார். பின்னர் கடை உரிமையாளர் எய்லீன் மெக்கெர்வீயுடனும் சிறிது நேரம் பேசினார். அப்போது அங்கு செய்தியாளர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி குறித்து கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த ஒபாமா, நாங்கள் இப்போது கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: