முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலாலாவின் தந்தைக்கு இங்கிலாந்தில் தூதரகபணி பாக்அரசு வழங்கியது

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், நவ. - 26 - தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலாலாவுக்கு பாகிஸ்தான் அரசால் அந்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது. தலிபான்களுக்கு எதிராக பேசியதால் கடந்த அக்டோபர் 9 ம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலாலா என்ற 15 வயது சிறுமி. இதைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்து நாடு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் மலாலாவின் பெற்றோரும் அவரது சகோதரர்களும் இங்கிலாந்துக்கு சென்றனர். இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய் மலாலா சுடப்பட்ட 30 வது நாளை மலாலா நாளாக கடைபிடிப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலாலாவின் தந்தைக்கு இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பதால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப்படுகிறது. மலாலாவின் உடலில் இருக்கும் குண்டு அகற்றப்பட்ட பிறகு இந்த வீட்டில்தான் அவர் வசிக்க இருக்கிறார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எம்.பி. காலித் மஹ்மூத் வரவேற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்