முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தோல்வியின் விளிம்பில் இந்தியஅணி

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

மும்பை, நவ. - 26 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மும் பையில் நடைபெற்று வரும் 2-வது கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. 4 -வது நாளன்று இந்திய அணி 2-வது இன்னிங்சில் மோசமாக ஆடியது. இறு தியில் ஆட்ட நேர முடிவில், 33 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்னை எடு த்து உள்ளது. துவக்க வீரரான காம்பீர் ஒருவர் மட்டு ம் அரை சதத்துடன் ஆட்டம் இழக்காம ல் இருக்கிறார். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் எவரும் 15 ரன்னைத் தாண்ட வில்லை. பின்வரிசையில் நம்பிக்கை அளிக்கும் அஸ்வினும் ஆட்டம் இழந்து விட்டார். ஹர்பஜன் தற்போது காம்பீ ருடன் இணைந்து ஆடி வருகிறார். இங்கிலாந்து அணி சார்பில் இந்திய அணியின் 7 விக்கெட்டையும், சுழற் பந்து வீச்சாளர்களான பனேசர் மற்றும் ஸ்வான் இருவரும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி 115.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்னை எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும், சேவாக் 30 ரன் னும், தோனி 29 ரன்னும், ஹர்பஜன் 21 ரன்னும் எடுத்தனர்.
பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 121.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 413 ரன் எடுத் தது. கேப்டன் குக் 122 ரன்னும், பீட்டர் சன் 186 ரன்னும் எடுத்தனர். தவிர, காம் ப்டன் 29 ரன்னையும், சமித் படேல் 26 ரன்னையும், பிரையர் 21 ரன்னையும், எடுத்தனர்.
பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி இங்கிலாந்தின் சுழற் பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறி வரு கிறது. 3 -வது நாள் ஆட்ட நேர முடி வி ல் இந்தியா 33 ஓவரில் 7 விக்கெட் இழ ப்பிற்கு 117 ரன்னை எடுத்து இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன் னிங்சில் 65 ஓவரில் 2 விக்கெட் இழப் பிற்கு 178 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கேப்டன் குக் 87 ரன்னு டனு ம், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3 -வது நாள் தொடர்ந்து ஆடிய அந்த அணி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தேனீர் இடைவேளையின் போது ஆட்டத்தை முடித்தது. அந்த அணியின் இன்னிங்சில் கேப்டன் குக் மற்றும் பீட்டர்சன் இருவரும் சதம் அடித்தது சிறப் பம்சமாகும்.
பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய இந் திய அணி ரன் எடுக்க தடுமாறி வருகிறது. காம்பீர் தவிர, மற்ற வீரர்கள் யா ரும் தாக்குப் பிடிக்க வில்லை. சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
துவக்க வீரரான காம்பீர் 109 பந்தில் 53 ரன்னை எடுத்துஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 5 பவுண்டரி அடக் கம். ஹர்பஜன் 1 ரன்னுடன் இருக்கிறா ர். சேவாக் 9 ரன்னிலும், புஜாரா 6 ரன் னிலும், டெண்டுல்கர் 8 ரன்னிலும், கோக்லி 7 ரன்னிலும், யுவராஜ் சிங் 8 ரன்னிலும், தோனி 6 ரன்னிலும், அஸ் வின் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் மான்டி பனேசர் முதல் இன்னிங்ஸ் போலவே இந்த இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் 61 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ஸ்வான் 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். ஆண்டர்சன் 4 ஓவர் மட்டுமே வீசினார்.
----------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago