முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் இன்று மகாதீபம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை, நவ.- 27 - திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 10-ம் நாளான இன்று மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிப்பு பணியும் செய்யப்படுகிறது. பஞ்ச nullதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலாவும் இரவில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவாக நேற்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷமிருக வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியை சுற்றிவந்தனர். தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடிகாண முடியாத அக்னி பிழம்பாக காட்சி அளித்ததாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் இன்று (27-ந் தேதி) மாலை 6.00 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 2000 சிறப்பு பேருந்துகளும் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து திருவண்ணாமலையில் போலீசார் குவிந்துள்ளனர். வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 3 டி.ஐ.ஜி.கள், 12 எஸ்.பி.க்கள், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிப்பார்கள். இந்த ஆண்டு ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 2 மணிமுதல் 6 மணிவரை விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்கும் பணி நடக்கிறது. குடிநீnullர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி சார்பில் நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர், நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள் செய்துள்ளனர். இதற்காக ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதியை நகராட்சி ஒதுக்கியுள்ளது. தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் விஜய் பிங்ளே நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோயிலுக்குள் பேகோபுரம் வழியே அனுமதிக்கப்படுவர். மத்திய மாநில அரசுகளின் விதிமுறையின்படி முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு அம்மனியம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் இயக்கவேண்டும். அதேபோல் மலைமீது செல்லும் பக்தர்கள் பேகோபுரம் 3வது மெயின் நுழைவுவாயிலில் நுழைந்து முலைப்பால் தீர்த்தம் வழியாக மலைமீது செல்லலாம். பக்தர்கள் மலைமீது செல்லும்போது தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டி, கற்nullரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மலைமீது இருந்து இறங்கும்போது முருகன் கோவில் 7வது பாதை வழியாக (திருப்பால் தீர்த்தம்) இறங்கவேண்டும். அதற்காக வனத்துறை மற்றும் காவல்துறையின் சார்பாக அதிரடிப்படையினர் வனப்பாதுகாப்பு குழு நண்பர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காட்டு வழியாக வரும் பக்தர்கள் மலைமீது ஏறவும் இறங்கவும் துணை புரிவார்கள். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், வனத்துறையும் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, மாவட்ட வன அதிகாரி நாகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்