முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் 2668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

புதன்கிழமை, 28 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, நவ.- 28 - திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மாலை  அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது  பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். திருவண்ணமலை அண்ணாமலையார் கோயிலில். ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான 10வது நாள் விழாவாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீnullர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அண்ணாமலையார் சன்னதியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, இறைவன் பலவாகவும் இருக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் கருவறை பகுதியில் பஞ்சமுகம் எனும் 5 தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சவிளக்கில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை முத்துகுமாரசாமி குருக்கள் ஏற்றினார். அதை கணேசன் குருக்கள் ஏந்தி வந்து பக்தர்களுக்கு  காண்பித்தார். பரணி தீபம் சாமி சன்னதியின் உட்பிரகாத்தை சுற்றி வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்ல அங்கும் தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக காலபைரவர் சன்னதி முன்பு பரணி தீபம் வைக்கப்பட்டது. பரணி தீப விழாவில் அமைச்சர்கள் ஆனந்தன், கோகுலஇந்திரா, கலெக்டர் விஜய்பிங்ளே, அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து விநாயகர்,முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து கொடிமரம் எதிரில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு சாமிகளுக்கு அபிஷேங்கள் நடத்தப்பட்டன.

உமையம்மனுக்கு சிவன் தனது இடது பாகத்தை வழங்கி அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தார். இந்த அர்த்த நாரீஸ்வரர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன் கோவிலுக்குள் இருந்து வெளியில் வருவார். சரியாக மாலை 5.54 மணிக்கு அர்த்த நாரீஸ்வரர் ஆடிக்கொண்டே வெளியில் எடுத்து  வரப்பட்டார். அப்போது  கொடிமரத்தின் முன் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. உடனே மலைக்கு சமிக்கை காட்டப்பட்டதும் மலை உச்சியில் மாலை 5.55 மணிக்கு 3500 கிலோ நெய் ஊற்றி தயாராக வைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கொப்பரையில்  1500 மீட்டர் திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. சிவபெருமான் அக்னி பிழம்பாக தோன்றியதை குறிக்கும் வகையில் இத்தீபம் மலை மீது ஏற்றப்பட்டது.

அப்போது அதிர்வேட்டு முழங்கியது.வீடுகளில் வாணவேடிக்கையுடன் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கற்nullரம் ஏற்றியும் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மகாதீபம் ஏற்றப்பட்டதும் கோவிலுக்குள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு nullஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இரவு தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்​உண்ணாமலையம்மன் மாடவீதியை வலம் வந்தனர். விருச்சிக ராசியில் உச்சம் பெற்ற ராகுவை குரு பார்க்கும் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த தீபத்தை தரிசிப்பவர்கள் 18 ஆண்டுகள் தரிசித்த பலனை அடைவார்கள் என ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் உலகநாதன் கணித்திருந்தார். அதற்கேற்றார்போல் மகாதீபத்தை தரிசிக்க ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் வந்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர். இதே போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலமும் சென்றனர். மலை உச்சியில்  ஏற்றப்படும் மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதில் இருந்து எடுக்கப்படும் தீப மை மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் அன்று பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்,சிறப்பு ரயில்களும்  இயக்கப்பட்டன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மகாதீப நிகழ்ச்சியின் போது கோவிலுக்கு மேல் ஆளில்லாத விமானத்தில் நவீனரக கேமராக்கள் பொருத்தி பக்தர்கள் கூட்டம்  கண்காணிக்கப்பட்டது. இந்த வருடம் இலவச பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. முதலில் வருபர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்களுக்கு கலெக்டர் விஜய் பிங்ளே மேற்பார்வையில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தது. நகரமன்ற தலைவர் பாலசந்தர்,நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீnullர் மற்றும் கழிப்பிட வசதிகளும் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தது.

மகாதீபநிகழ்ச்சியில்அமைச்சர்கள்ஆனந்தன்,காமராஜ், சுப்பிரமணியன்,எம்.சி.சம்பத்.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறாடா வைகை செல்வன்,கலெக்டர் விஜய்பிங்ளே, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.அரங்கநாதன், பாபு முருகவேல், வேலூர் மேயர் கார்த்திகாயினி,திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் பாலசந்தர்,அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்