ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை பிரித்து பார்க்கவில்லை

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,நவ.- 29 - ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை தனித்து பார்க்கவில்லை என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபம ராவ் தெரிவித்துள்ளார்.  கடலில் ஆதிக்கம் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தாங்கி கப்பலை இறக்குமதி செய்து அதை தன் வசதிக்கு மாற்றி அமைத்துள்ளது. இந்த கப்பலில் போர் விமானங்களை இறக்கி ஒத்திகை பார்த்ததோடு சீன கடற்படையில் அந்த விமானந்தாங்கி கப்பல் சேர்க்கப்பட்டது. இதனையொட்டி தென் சீனா கடல் பகுதி மட்டுமல்லாது இந்துமகா சமுத்திரம், பசிபிக் பிராந்திய பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் கடல் பகுதியில் மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் இந்தியாவும் சீனாவும் முழு ஆதிக்கம் செலுத்தலாம் என்று சீனா கருதுகிறது.  இந்தநிலையில் கடல்சார் நடவடிக்கையில் குறிப்பாக ஆசிய,பசிபிக் பிராந்திய கடல் பகுதி நடவடிக்கைகளில் சீனாவை நாங்கள் ஒருபோதும் பிரித்து பார்த்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமாராவ் தெரிவித்துள்ளார். கடல்சார் நடவடிக்கைகளில் சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காதான் ஆதிக்க சக்தியாக திகழ்கின்றபோதிலும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் நல்லுறவு வைத்துக்கொள்வதில் சீனாவை இந்தியா ஒருபோதும் பிரித்து பார்த்ததில்லை என்றும் நிரூபமாராவ் தெரிவித்துள்ளார். கடல்சார் நடவடிக்கைகளில் சீனாவை ஊக்குவிப்பு செய்வதோடு சீனாவுடன் ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று வாஷிங்டன்னில் பத்திரிகையாளர்களிடையே உரையாற்றும்போது ராவ் கூறினார். இந்தியாவின் வெளியுறவு செயலாளராகவும் நிரூபமா ராவ் பதவி வகித்தவர். சீனாவின் தூதராகவும் பதவி வகித்தவர். சீனா,ஜப்பான், வியட்நாம்,பிலிப்பைன்ஸ் நாடுகளிடையே கடல் எல்லை சம்பந்தமாக பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண வேண்டும் என்றும் நிரூபமா ராவ் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: