முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ``மஹாவீர் ஜெயந்தி'' வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - மஹாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தமிழகம் எங்கும் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாரதத்தின் தத்துவப் புதல்வர்களில் ஒருவரான பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண, சமய மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  மும்மணிகள் என்று அழைக்கப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை போதித்தவர் மகாவீரர்! எல்லா உயிர்களும் சமம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தியவர் மகாவீரர்! 

கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மகாவீரர்! சாதிக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டவர் மகாவீரர்!

மகாவீரரின் சிந்தனைகளை சிந்தையில் கொண்டு, தமிழகம் எங்கும் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக் கொண்டு, மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும்  அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்