முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டம் போடி மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

போடி நவ.- 28 - போடியில் தென்திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய அருள்மிகு பரமசிவன் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீப திருநாளை முன்னிட்டு, 700 லிட்டர் நெய் கொப்பறையில், 180 கிலோ திரியால் மகாதீபம் ஏற்றப்பட்டது. தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூரில் உள்ள பரமசிவன் மலைத்திருக்கோவில் தென்திருவண்ணாமலை என்று சிறப்பு பெயர் பெற்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழு சார்பில் கார்த்திகை தீபத்திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 700 லிட்டர் நெய் கொப்பறையில் 180 கிலோ எடையுள்ள திரியால் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை சார்பில் நடைபெற்ற கார்த்திகை மகாதீபம், குருநாதர் சுருளிவேல் முன்னிலையில், பரமசிவன் மலைக்கோவில் அடிகளார் சக்திமுருகானந்த சுவாமிகள் மகாதீபத்தை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினார்கள். இவ்விழாவில் கோவில் தக்கார் சுரேஷ், கூடுதல் காவல்துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், பேரவை தலைவர் ஜெயராம், செயலாளர் குமார், பொருளாளர் முருகன் மற்றும் கார்த்திகை தீபக்குழுவினர்கள், பரமசிவன் கோவில் அன்னதான அறக்கட்டளை தலைவர் இளைய ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போடி சரக காவல்துணைக்கண்காணிப்பாளர் அருள்அமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ்டுபட்டனர். மகாதீபத்திருநாளன்று பரமசிவனுக்கு சிறப்பு அபிசேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்