முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு எந்திரங்களை உடைக்க முயற்சி - அ.தி.மு.க. புகார்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - சில ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எந்திரங்களை உடைக்க முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மற்றும் நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு இநயந்திரங்களில் தில்லுமில்லு செய்ய தி.மு.க.வினர் முயற்சித்தாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து விரிவாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வினரின் முறைகேடுகளை தடுக்க அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உடனடியாக துணை ராணுவப் படைகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன், டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், சென்னையிலுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அ.தி.மு.க. சார்பில் நேற்று மனு அளித்துள்ளார். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு வைத்திருந்தபோதும் அவற்றில் தில்லுமுல்லு செய்ய முயற்சித்தாக வெளியான செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்வதற்காக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தார், தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்ததாகவும், ஆனால் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு ஓட்டுநர் மெத்தனம் காட்டியதால் அந்த வாகனத்தை தாசில்தார் திருப்பி அனுப்பிவிட்டதாகவும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய தி.மு.க.வினர் திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பின்னிரவில் தேர்தல் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாருக்கும் தெரியாமல் திறந்து பார்த்ததாக, நெல்லையில் வெளியாகும் ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு சம்பவங்கள் குறித்து தனியார் அமைப்பு மூலம் விரிவான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், நெல்லை ஒரு நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியை கருத்தில் கொண்டு, ஆளும் தி.மு.க.வின் உத்தரவுக்கிணங்க அதிகாரிகள் தில்லுமுல்லு செய்யாமல் தடுக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உடனடியாக துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு நிர்வாகம், முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பதை தவிர வேறு எந்த முடிவையும் அரசு நிர்வாகம் மேற்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்