முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி ஹபீசுக்கு எதிராகஇந்தியா ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,டிச.- 2 - மும்பை தாக்குதலில் ஹபீசு சயீது மூளையாக செயல்பட்டதற்கான ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் அவன் மீது நடவடிக்கை எடுக்க தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் கடந்த வாரம் புனே சிறையில் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் முக்கிய தீவிரவாத அமைப்பான ஜமாத் -உத்-தாவா நிறுவனர் ஹபீசு சய்யீது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டு விதிகளின்படி அவனை அடைத்து வைத்திருக்க முடியாது. அதேசமயத்தில் ஹபீசுூக்கு எதிராக எந்த ஆதாரம் இருந்தாலும் கோர்ட்டு விதிகளின்படி அவனிடம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம் என்றார் ஹர். இந்தியா ஆதாரம் கொடுத்தால் ஹபீசு மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஹர் ஆம் என்றார். ஹபீசு மீது உறுதியாக நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே ஹபீசு காவலில் வைக்கப்பட்டிருந்தான். தற்போதுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அதனால்தான் அவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முன்னோடி அமைப்பாக ஜமாத்-உத்-தாவாவை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதனையொட்டி அந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹபீசு, லாகூர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி அவன் விடுதலை செய்யப்பட்டான். அதேசமயத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஹபீசு செய்யப்பட்டான். பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளான். சயீது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் ஹபீசு, பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருவதோடு பேரணிகள், ஊர்வலம் நடத்தி அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறான். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே சூழ்நிலை மோசமாக போய்விட்டது. தற்போது இருநாடுகளும் கடினமான காலக்கட்டத்தை கடந்து வருகிறது என்று அமைச்சர் ஹர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உறவு சீரைடந்துள்ளது என்றும் ஹர் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்