முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, டிச.- 2 - ரஷ்யாவில் கடுமையாகப் பனி பெய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவில் எப்படி பனி பெய்ததோ அதே நிலை மீண்டும் உருவாகியுள்ளது என்று காலநிலை ஆய்வு மைய வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். பனி கடுமையாத பெய்ய உள்ளதால் மீண்டும் மாஸ்கோவில் மின்சாரம், சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கும் நிலை வர உள்ளது. புதன்கிழமை பெய்ததுபோல் மீண்டும் வெள்ளிக்கிழமை பனி கொட்டும். இதனால் மரங்களும், வீடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். விமானப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிப்படையலாம். 2010 -ம் ஆண்டு கடும் பனி பெய்ததால் மாஸ்கோவிலுள்ள ஷெரிமிடைவோ, டொமாடிடோவோ ஆகிய இரு விமான நிலையங்களும் கடும் பாதிப்படைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். அதே நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே பனிப்பொழிவு அதிகமாகவே இருக்கும் என்று காலநிலை ஆய்வுமைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்