முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு சேதம் - சாலை மறியல்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

காஜியாபாத்,ஏப்.16 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர்.அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டனர். சிலை சரிசெய்யப்பட்ட பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள முரத் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால் கடந்த 20 ஆண்டுகளாக சிலை திறக்கப்படாமல் இருக்கிறது. அதனால் இந்த சிலை எப்போதும் மூடப்பட்டிருக்கும். நேற்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமானதால் அன்று மட்டும் சிலையை திறந்து மரியாதை செலுத்த பொதுமக்கள் சென்றனர். ஆனால் சிலையை திறந்து பார்த்தபோது சில விஷக்கிரிமிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து ஏற்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர். அதற்கு அவர்கள் உடன்பட மறுக்கவே சிலை சரி செய்யப்பட்டது. பொதுமக்கள் கோபம் தணிந்து கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு