முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படத்தை திரையிட விடமாட்டோம் கமலுக்கு மனிதநேய மக்கள்கட்சி எச்சரிக்கை

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சேலம் டிச.- 3 -​முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருந்தால் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் என நடிகர் கமலஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியின் சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று மதியம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி ரஷாதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கும் இந்த செயலை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இதனால் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். மனிதநேய மக்கள் கட்சி மது ஒழிப்பை ஆதரித்து மதுக்கடைகளை மூடக்கோரி வரும் 20 ந் தேதி முதல் 30 ந் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம்,துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய உள்ளது. பின்னர் டிச 31 ந் தேதி மதுஆலைகள் மற்றும் மது சேமிப்பு குடோண்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளது. துப்பாக்கி படத்தில் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக போராட்டம் நடத்தியதில் தமிழக அரசு தலையிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுத்தது.தற்போது நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் துப்பாக்கியை விட அதிகமாக முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.நாங்களும் அந்த படம் திரையிடும் முன்பு எங்களது பிரதிநிதிகளிடம் படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். படம் வெளிவந்து அதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் நடிகர் கமலஹாசன் முஸ்லீம் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரும்.மேலும் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களை முற்றுகையிட்டு படம் ஒரு காட்சிகூட திரையிட அனுமதிக்கமால் போராட்டம் நடத்துவோம்.

பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.லிபரான் கமிஷனில் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.

கோவை சிறையில் 12 வருடங்களாக அபுதாகீர் என்ற சிறைவாசி உள்ளார். அவர் சிறுnullநிரக பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க அவர் 90 நாட்கள் பரோலில் செல்லலாம் என ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆனால் சிறை அதிகாரிகள் பரோலில் அனுமதிக்கவில்லை. உயிருக்கு போராடும் அவரை சிறை நிர்வாகம் பரோலில் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட செயலாளர் முகமது ரைஸ், மாநகர மாவட்ட செயலாளர் ஷேக்முகமது,வெல்டிங் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago