முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்ச்சித் தாரகை கிம்கர்தஷியான் பஹ்ரைன் வருகை

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மனாமா, டிச. - 3 - அமெரிக்காவின் கவர்ச்சித் தாரகை கிம் கர்தஷியான் பஹ்ரைனுக்கு வந்துள்ளார். இதற்கு அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ்ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசித் தாக்கியதால் பெரும் பரபரப்பாகி விட்டது. அரபு நாடான பஹ்ரைனுக்கு கவர்ச்சி தாரகையான கிம் வந்துள்ளதற்கு அங்குள்ள பழமைவாதிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். போராட்டத்திலும் குதித்தனர். 50 க்கும் மேற்பட்டோர் கூடி கிம்முக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த கலவரத் தடுப்புப் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். பஹ்ரைனின் ரிபா நகரில், மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்ஸ் என்ற கிளையை கிம் கர்தஷியான் திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். திறப்பு விழாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இந்தக் கலவரம் நடந்தது. கூட்டத்தினரை அப்புறப்படுத்திய பின்னர் பலத்த பாதுகாப்புடன் கிம் அழைத்து வரப்பட்டார். கடந்த வாரம்தான் குவைத் போயிருந்தார் கிம். அங்கும் இந்த மில்க் ஷேக் கடையைத் திறந்து வைத்தார். இந்த மில்க் ஷேக், கிம் கர்தஷியானின் சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago