முக்கிய செய்திகள்

தங்கம் விலை பவுன் ரூ.1928

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Gold

 

சென்னை,ஏப்.16 - தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துகொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு பவுன் ரூ.ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதும், அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் திருவிழாக்காலமாக இருப்பதும் தங்கத்தின் மேல் முதலீட்டார்கள் அதிக அளவு முதலீடு செய்வதும் விலை உயர்வுக்கு காரணமாகும். மேலும் அடுத்தமாதம் அட்ஷய திருநாள் வருவதால் அன்றைய தினம் மக்கள் அதிக அளவு நகைகளை வாங்குவார்கள். அதனால் மேலும் தங்கத்தின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு பவுன் ரூ. ஆயிரத்து 800 ஆக இருந்தது. இது நேற்றுமுன்தினமும் நேற்றும் உயர்ந்து ஒரு பவுன் விலை ஆயிரத்து 928 ஆக அதிகரித்துவிட்டது. இப்படி தங்கத்தின் விலை உயர்வால் ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். இதை தடுக்கவும் தங்கத்தின் விலையை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதா என்று மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: