முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ராமர் கோவில் இடிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

கராச்சி, டிச.4 - பாகிஸ்தானின் கராச்சி நகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ராமபிரான் கோவில் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அங்கு சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தக் கோவிலை இடிக்கக் கூடாது என்று தடைகோரும் மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் உள்ள இந்தச் சூழ்நிலையில் கட்டுமான உரிமையாளர் ஒருவர், அந்தக் கோவிலையும், அப்பகுதியில் இருந்த பல வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டார். கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் சுமார் 40 பேர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து ஹிந்து கவுன்சில் அமைப்பினர் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்செய்தி பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிபியூனல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கோவிலை இடிக்கும் முன்பு அங்கிருந்த சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள், ஆபரணங்களை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவிலை இடிப்பதை தடுக்க முயன்ற தங்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் அப்பகுதியில் வசித்து வரும் ஹிந்துக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் கோவிலும், இடிக்கப்பட்ட வீடுகளும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என்று கோவிலை இடித்த கட்டுமான உரிமையாளர் அகமது தெரிவித்துள்ளார்.

ஆனால் கோவில் நூறாண்டுகளுக்கு மேல் அங்கு இருப்பதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பிருந்தே தங்கள் குடும்பம் அப்பகுதியில் வசித்து வருவதாகவும் வீடுகளை இழந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்