சிரியா அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை

புதன்கிழமை, 5 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.5 - ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிரியா அதிபர் பஸார் அல் அஸாத்துக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் பேசும்போது,  திரும்பத் திரும்ப அவர் இதை வற்புறுத்திப் பேசினார். பிராகுவேயில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் இதை வலியுறுத்தியதாக, ஸின்குவா செய்திகள் தெரிவித்தன.

அல் அசாத்தும், அவரது ஆணையை கடைபிடிப்பவர்களுக்கும் 

தெளிவாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகம் அவர்களை மிகத் தெளிவாக கவனித்து வருகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்று கூறிய அவர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு நீங்களே பொறுப்பு என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை  ஒபாமா

தெரிவிக்கவில்லை.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இடம்பெயர்வதை புலனாய்வு மூலம் அமெரிக்கா அறிந்துகொண்டுள்ளது. பிராகுவேயிடம் இதை கிளிண்டன் தெளிவாக தெரிவித்துள்ளார். இது சிவப்பு கோடு என்று அழைக்கப்டுகிறது.அமெரிக்க மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்ட அவர் இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார். ரதாயன ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து  ஆகஸ்ட் மாதத்தில் ஒபாமா கெடு விதித்திருந்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: