முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா. டிச. 6 - இங்கிலாந்து அணிக்கு எதிராக கொல் கத்தாவில் நேற்று துவங்கிய 3 - வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்னை எடுத்து உள்ளது. இந்திய அணி தரபப்பில் டெண்டுல்கர் மற்றும் காம்பீர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தனர். அவர்க ளுக்கு பக்கபலமாக சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆடினர். 

முதல் நாளான நேற்று விழுந்த 7 விக்கெட்டில் இங்கிலாந்து அணி சார்பில் மூன்றை வேகப் பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், மூன்றை சுழற் பந்து வீச்சாள ர்களும் கைப்பற்றி உள்ளனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில், சே வாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். 

இந்திய அணி இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சி ல் 90 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்னை எடுத்தது. 

முதல் நாள் முடிவில் கேப்டன் தோனி 22 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தாார். வேகப் பந்து வீச்சாளர் ஜாஹிர் கான் கணக்கைத் துவக்காமல் இருக்கிறார். 

இந்திய அணியின் இன்னிங்சில் டெண்டுல்கர் மற்றும் காம்பீர் இருவரும் சிறப் பாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணி கெளரவமான நிலையை எட்ட உதவினர். 

டெண்டுல்கர் அதிகபட்சமாக, 155 பந் தில் 76 ரன் எடுத்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஆண்ட ர்சன் வீசிய பந்தில் கீப்பர் பிரையரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

துவக்க வீரராக இறங்கிய சாம்பீர் மற்று ம் சேவாக் இருவரும் நன்கு ஆடி அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். கா ம்பீர் 124 பந்தில் 60 ரன் எடுத்தார். இதி ல் 12 பவுண்டரி அடக்கம். 

சேவாக் 236 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். யுவராஜ் சிங் 54 பந்தில் 32 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, அஸ்வின் 21 ரன்னிலும், புஜாரா 16 ரன்னிலும், கோக்லி 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 68 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் வீழ் த்தினார். தவிர பனேசர் 2 விக்கெட்டும், ஸ்வான் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

முன்னதாக இந்திய அணியின் ஸ்கோர் 47 ல் சேவாக் ஆட்டம் இழந்தார். 88 ல் புஜாராவும், 117 ல் காம்பீரும் ஆட்டம் இழந்தனர். பின்பு கோக்லி 136 ரன் னி லும், யுவராஜ் சிங் 215 ரன்னிலும், டெ ண்டுல்கர் 230 ரன்னிலும், அஸ்வின் 268 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.         

இந்திய அணி 12.5 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 33.4 ஓவரில் 100 ரன்னையும், 52.5 ஓவரில் 150 ரன்னையும், 63.6 ஓவ ரில் 200 ரன்னையும், 81.5 ஓவரில் 250 ரன்னையும் எட்டியது. 

துவக்க வீரர் காம்பீர் 81 பந்தில் 50 ரன் னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம். டெண்டுல்கர் 99 பந்தில் 50 ரன்னை எட்டினார். இதில் 9 பவுண்டரி அடக்கம்.

சமீப காலமாக மோசமாக ஆடி வந்த டெண்டுல்கர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரை சதம் அடித்து விமர்சகர்களி ன் வாயை அடைத்து இருக்கிறார். 4- வ து வீரராக இறங்கிய அவர் இந்திய அணியின் ஸ்கோர் 230 ல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago