முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களிக்கும்..!

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.7 - சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு பிரச்சினை தொடர்பாக ராஜ்ய சபையில்  நடக்கும் விவாதத்தில் ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் அரசுக்கு எதிராக  வாக்களித்தால் அது மதவாத சக்திகளுக்கு உதவி செய்வது போல் ஆகிவிடும். எனவே ராஜ்ய சபையில் எங்கள் கட்சி காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆகரவு அளிக்கும் என்று அவர் கூறினார்.

ராஜ்ய சபையில் இந்த பிரச்சினை விவாதத்துக்கு வரும்போது நடக்கும் விவாதத்தில் ஐக்கிய முன்னணி அரசு வெற்றி பெறும் என்று 

பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இந்த பிரச்சினை விவாதத்துக்கு வரும்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்வெளிநடப்புச் செய்தன. அது பிரதமரின் கூற்றை நிரூபிப்பதாகவே உள்ளது.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு பிரச்சினை தொடர்பாக ராஜ்ய சபையில்  நடக்கும் விவாதத்தில் எங்கள் கட்சி ஐக்கிய முன்னணி அரசை ஆதரிப்பதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்றும் மாயாவதி தெரிவித்தார். மிக இக்கட்டான சூழ்நிலையில்    

ராஜ்ய சபையில் விவாதம் நடக்கும்போது உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று நிருபர்தள் கேட்டபோது, மாயாவதி இவ்வாறு பதிலளித்தார்.

நிலமை இவ்வாறு இருக்க,  சிபிஐ, உள்ளிட்ட ஏஜென்ஸிகள் மூலம் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை காங்கிரஸ் கட்சி மிரட்டி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது சிபிஐக்கும், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு பிரச்சினைக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்றும், அரசுக்கு சாதகமாக நடக்கவே அவர்கள் வெளிநடப்புச்

செய்தனர் என்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை பாஜக வை சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி கடுமையாகச் சாடினார்.

     எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார்ஷிண்டே மறுத்தார். ஜனநாயக அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்