முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: இங்கிலாந்து அணி வலுவான நிலை

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, டிச.7 - இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தா வில் நடைபெற்று வரும் 3-வது டெஸ் ட் போட்டியில் கேப்டன் அலிஸ்டார் குக்கின் அபார சதத்தால் அந்த அணி வலுவான நிலையை அடைந்துள்ளது. இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்னை எடு த்து உள்ளது.

டெஸ்ட் போட்டியில் 23-வது சதம் அடி த்ததன் மூலம் குக் புதிய வரலாறு படைத்து இருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். 

தவிர, இந்தத் தொடரில் தொடர்ந்து 3 சதம் அடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணி தற்போது இந்த டெஸ்டில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

குக் ஆட்ட நேர இறுதியில் 136 ரன்னுட ன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பிரமாண்ட ஸ்கோரை எட்ட அவர் நல்ல  அடித்தளம் அமைத் துக் கொடுத்து இருக்கிறார். 

முன்னதாக ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்னை எடுத்தது. அத ற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணி தற்போது ஆடி வரு கிறது. 

இங்கிலாந்து அணியின் துவக்கமே அட்டகாசமாக உள்ளது. இங்கி. வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். குக்கும், காம்ப்டனும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 165 ரன் சேர்த்தனர். 2 வது நாள் ஆட்டத்தில் இந்திய பெளலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 101 ரன் பின்தங்கி உள்ளது. அந்த அணி வசம் 9 விக்கெட் உள்ளது. கேப்டன் குக் இங்கிலாந்து வீரர்களில் அதிக சதம் அடித்தவர் என்ற  பெருமை யுடன், கேப்டனாக பொறுப்பேற்றதி

லிருந்து தொடர்ந்து 5 டெஸ்டில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார்.  2 - வது நாளன்று சுமார் 5 மணி நேரம் களத்தில் இருந்த கேப்டன் குக் 19 பவுண்டரியையும், 1 சிக்சரையும் அடித்தார். மேலும், டெஸ்ட் போட்டியில் 7,000 ரன்னை எட்டியும் இருக்கிறார்.

தவிர, டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை புரிந்த இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்று இருக்கிறார். அவர் 27 வயது 347 நாட்களில் இந்த சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சச்சினின் இளம் வயது சாதனையை அவர் முறியடித்து இருக்கிறார். சச்சின் 28 வயது 193 நாளில் 7,000 ரன்னைக் கடந்து சாதனை புரிந்து இருந்தார். 

2- வது நாளன்று சிறப்பாக பேட்டிங்செய்த குக் 17 ரன்னில் இருந்த போது, ஜாஹிர்கான் பந்து வீச்சில் ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால்அதனை புஜாரா தவறவிட்டார். புஜாரா கோட்டை விட்ட கேட்ச் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறி விட்டது. 

தற்போதைய நிலையில் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகி உள்ளது. எனவே 3-வது டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணி திட்டமிட்டது. ஆனால் அது கேள்விக் குறியாகியுள்ளது. 

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்னை எடுத்து இருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே 316 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

கேப்டன் தோனி அரை சதம் அடித்தார். அவர் 114 பந்தில் 52 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். பனேசர் பந் 

தில் 2 சிக்சர்களை அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

இறுதியில் ஸ்டீவன் பின் வீசிய அளவு குறைவான பந்தை அவர் தவறாக கணித்து ஷாட் அடிக்க முயன்ற போது, அவர் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 89 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பனேசர் 90 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, பின் 1 விக்கெட்டும், ஸ்வான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago