சட்டப் பேரவையின் வைர விழா: பிரதமர் வாழ்த்து கடிதம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.7 - தமிழக சட்டப்பேரவை ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமை உணர்வுகளுக்கும் மையமாக திகழ்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் வைர விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

தமிழ சட்டப்பேரவை 2012 நவம்பர் 30-ந் தேதி வைர விழா கொண்டாடுவது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமையுணர்வுக்கும் சட்டப்பேரவை மையமாக திகழ்கிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவை மாபெரும் அரசியல் தலைவர்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ், எம்.பக்தவக்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருக்கும் மற்றும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மாதிரி மாநிலமாக்கிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான வேளையில் தமிழக சட்டப்பேரவையை மரியாதைக்கும, பெருமைக்கும் உரியதாக ஆக்கிய அனைவருக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய உறுப்பினர்களுக்கும், முன்னாள் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக மக்கள் அமைதியும், வளமும், நல்லிணக்கமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். 

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: