முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.3 ஆக பதிவு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

டோக்கியா, டிச. 8 - ஜப்பான் நாட்டில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து ஜப்பானின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் ஹோன்சு அருகே சென்டாய் பகுதியை ஒட்டிய சன்ரிகு ஒகி என்ற இடத்தை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. ஆனால், இவாடா பகுதியில் 20 செ.மீ. அளவுக்கே சுனாமி அலைகள் எழுந்தன. கடந்த 2011 ம் ஆண்டு நிலநடுக்கத்தின்போது பெரும் சுனாமி பேரலைகள் தாக்கிய பகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9 வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011 ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 0.5 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கு விட்டுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்