முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, டிச.8  - லோக்பால் மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சில முக்கிய திருத்தங்கள் வருமாறு: மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே லோக்பால் மசோதா பயன்பாட்டுக்கு வரும். அரசு உதவிபெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே லோக்பால் வரம்புக்குள் வரும். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த குழு தேர்வு செய்யும். பிரதமரும் நிபந்தனைகளுடன் லோக்பால் வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். லோக்பால் மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேறியது. எனினும் மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த மசோதாவில் திருத்தம் செய்வதற்கு வசதியாக மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அக்குழு தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 3 கோடி வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு வசதியாக மாநிலங்களில் புதிய நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகள் பணியிடங்களை உருவாக்க ஆண்டுக்கு ரூ.80 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய யூரியா முதலீட்டுக் கொள்கை மற்றும் தேசிய முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பான முடிவுகளை மத்திய அமைச்சரவை ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago