முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட பாடலை வெளியிட்டார் கமலஹாசன்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

மதுரை,டிச.8 - மதுரையில் நடந்த விழாவில் விஸ்வரூபம் பட பாடலை நடிகர் கமல் வெளியிட்டார்.  ஆங்கில படங்களுக்கான இணையான தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படம் விஸ்வரூபம். இந்த படத்தை நடிகர் கமலஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் கதாநாயகிகளுகாக நடித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா நேற்று மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடந்தது. விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு சிடியை வெளியிட்டு பேசினார். விழாவில் நடிகைகள் ஆண்டிரியா, பூஜாகுமார் ஆகியோரு கலந்து கொண்டனர். நடிகர் கமலஹாசன் சிடியை வெளியிட அவரது நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி பத்ரிநாத்  பெற்றுக்கொண்டார்.

   விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது, எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள பரமக்குடிதான். நான் சிறு வயதாக இருந்த போது சென்னையில் இருந்து ரயிலில் மதுரைக்கு வந்து பின்பு பஸ்சில் பரமக்குடிக்கு செல்வேன். ஆனால் இன்றைக்கு ஹெலிகாப்டரில் வந்தேன். இப்படி வருவேன் என்று நினைத்து பார்த்தது கூட கிடையாது. இப்படி செல்வதற்கு காரணம் ரசிகர்களாகிய உங்களின் பலம்தான்.

    விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் படத்தில் என்ன ரூபம் என்பது எனக்கு தெரியாது. ரசிகர்களாகிய உங்களை நம்பிதான் எங்கள் திறமைகளை காட்டி இருக்கிறோம். இதற்கு சிறப்பு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. மதுரை மண்ணில் இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இது மாபெரும் வெற்றியின தொடக்கம் எனவே உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விஸ்வரூபம் படத்தின் ட்ரெய்லர் போட்டு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர்  நடிகர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்