முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீடு: ராஜ்யசபையிலும் காங்., வெற்றி

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.9 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்ற இருசபைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவீதம் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புடனான விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. இதனையொட்டி முதலில் லோக்சபையில் விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக 253 ஓட்டுக்கள் கிடைத்தன. எதிராக 218 ஓட்டுக்கள் விழுந்தன. இதன்மூலம் மத்திய அரசின் முடிவுக்கு லோக்சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து ராஜ்யசபையிலும் ஓட்டெடுப்புடனான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். சபைக்கு தவறான வழிகாட்டுகிறார் என்று மத்திய வர்த்தகதுறை ஆனந்த் சர்மா மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியதோடு சபையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக பேசிக்கொண்டியிருந்தபோது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சபை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதத்தை அனுமதிக்க என்.கே.சிங் தலைமையிலான அறிக்கையில் கூறப்பட்டிருந்ததை அமைச்சர் ஆனந்த் சர்மா சுட்டிக்காட்டியபோது சபையில் கூச்சல் குழப்பம் ஆரம்பமானது. அப்போது என்.கே.சிங்கும் சபையில் இருந்தார். ஐக்கிய ஜனதாதளம் சார்பாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்மாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க சிங் எழுந்தார். அதற்கு சபை தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் சிங்கை பேச அனுமதிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதனால் சபையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்துக்கொண்டியிருந்ததால் அப்போது தலைவர் இருக்கையில் இருந்த துணைத்தலைவர் சபையை நேற்று பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியதும் தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது சபைக்கு வந்திருந்த 212 எம்.பி.க்களில் 116 பேர் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டனர். இதனையொட்டிய அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்ற இருசபைகளும் ஒப்புதல் அளித்தன. எப்படியோ சிரமப்பட்டு மத்திய அரசும் சமாளித்து தப்பிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்