முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீட்டால் விவசாயிகள் பயனடைவர்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

லூதியானா,டிச.9 - நாட்டில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால் விவசாயிகள் நுகர்வோர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை  அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளித்த மறுநாள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் பஞ்சாப் விவசாய பல்கலைக்கழக பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு  பேசினார். விழாவில் மன்மோகன் சிங்கிற்கு விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் நன்றி தெரிவித்து மன்மோகன் சிங் பேசுகையில் நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால் விவசாயிகள், நுகர்வோர் அதிகம் பயன் அடைவார்கள் என்றார். மேலும் விவசாய-சந்தை தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் இதனால் விவசாய பொருட்கள் குறிப்பாக பழம் வகைகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றிருக்கு தண்ணீர் அதிக தேவைப்படுகிறது. நாட்டின் உணவு பற்றாக்குறை ஏற்படாதவாறு குறைந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். சோளம், கம்பு போன்ற பயிர்களையும் பயிரடலாம். காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது விளைச்சலை பாதிக்கும். விளைச்சல் பாதிக்காதபடி நாட்டில் உள்ள அனைத்து விவசாய பல்கலைக்கழகங்களும், விவசாய கல்லூரிகளும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதில் பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகம் முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்