முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

மாண்டியா,டிச.9 - காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டிய மாவட்டத்தில் போராட்டம் வலுக்கிறது. நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி நாளை வரை தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் காவரியில் 12டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று காவரி கண்காணிப்புக்குழுவானது கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை விரைவில் அரசிதழில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டிய மாவட்ட விவசாயிகள் நேற்று ஒருநாள் பந்த் போராட்டம் நடத்தினர். இதனையொட்டி மைசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மறியல் போராட்டமும் நடந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 

மாண்டியா மாவட்ட ரைதா ஹதராக்ஷன சமிதி என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்திற்கு மேல்புறம்தான் கிருஷ்ணசாகர் அணையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மைசூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்