முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. 9 - இங்கிலாந்து அணிக்கு எதிராக கொல் கத்தாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில், 2-வது இன்னிங் சில் 10 -வது விக்கெட் ஜோடி ஆடி வரு கிறது. இதில் காம்பீர், சேவாக், அஸ்வி ன் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து ஆட வில்லை. இங்கிலாந்து அணி சார்பில், ஆண்டர் சன், பின், ஸ்வான் மற்றும் பனேசர் ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப் பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகு த்தது. 

இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை த் தவிர்த்தது. தற்போது 32 ரன் முன்னி லை பெற்று உள்ளது. கைவசம் 1 விக்கெட் உள்ளது. இன்று ஆட்டத்தின் கடை சி நாளாகும். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரு கிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங் சில் 316 ரன் எடுத்தது. இதில் டெண்டுல் கர் 76 ரன்னும், காம்பீர் 60 ரன்னும், தோனி 52 ரன்னும், சேவாக் 23 ரன்னு ம், யுவராஜ் சிங் 32 ரன்னும், அஸ்வின் 21 ரன்னும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித் து ஆடி பிரமாண்ட ஸ்கோரை எட்டிய து. அந்த அணி இறுதியில், 523 ரன் எடு த்தது. 

கேப்டன் குக் அதிகபட்சமாக, 377 பந் தில் 190 ரன் எடுத்தார். டிராட் 223 பந்தி ல் 87 ரன் எடுத்தார். தவிர, காம்ப்டன் 57 ரன்னும், பீட்டர்சன் 54 ரன்னும், பிரைய ர் 41 ரன்னும், சமித் படேல் 33 ரன்னும், ஸ்வான் 21 ரன்னும் எடுத்தனர். 

பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில், 83 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்னை எடுத்து உள்ளது. 

இந்திய அணி தரப்பில், 8 - வது வீரராக  இறங்கிய அஸ்வின் அதிகபட்சமாக, 151 பந்தில் 83 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதி ல் 13 பவுண்டரி அடக்கம். சேவாக் 57 பந்தில் 49 ரன்னையும், காம்பீர் 104 பந்தி ல் 40 ரன்னையும் எடுத்தனர். தவிர, கோக்லி 20 ரன்னையும், யுவராஜ் சிங் 11 ரன்னையும், இஷாந்த் சர்மா 10 ரன் னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பின் 37 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஆண்டர்சன் , ஸ்வான் தலா 2 விக்கெட்டும், பனேசர் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

முன்னதாக இந்திய அணியின் ஸ்கோர் 86 ஆக இருந்த போது சேவாக் ஆட்டம் இழந்தார். 98 ல் புஜாரா ஆட்டம் இழந்தார். அதன் பின்பு சிறிது இடைவெ ளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்