முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, டிச. - 10 - இங்கிலாந்து அணிக்கு எதிராக கொல் கத்தாவில் நடைபெற்ற 3 -வது டெஸ்டி ல் இந்திய பேட்ஸ்மேன்களின் மோச மான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் தோனி குற்றம் சாட்டினார். இந்திய அணியின் தோல்விக்கு பிறகு கொல்கத்தாவில் நடைபெற்ற நிருபர் கள் கூட்டத்தின் போது, அவர்களது கே ள்விக்கு பதில் அளிக்கையில் தோனி மேற்கண்டவாறு கூறினார். இந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தி டம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் 2- 1 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் கடந்த 13 வருடகால மாக இந்திய அணி டெஸ்டில் தோற்ற து கிடையாது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட கூடுதலாக 207 ரன் பெற்று இருந்தது. இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் கவனமாக ஆடியது. அதற்கு ஏற்றார் போல துவக்க வீரர்கள் நன்கு ஆடி நல்ல அடித்தளத்தை அமை த்துக் கொடுத்தனர். இந்திய அணி முத ல் விக்கெட்டிற்கு 86 ரன்னைச் சேர்த் தது.
ஆனால் பின்பு வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் தவறி விட்டனர். இதனால் 9 விக் கெட் இழப்பிற்கு 197 ரன் என்ற நிலைக் கு சென்றது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 36 ரன்னிற்கு 6 விக்கெட்டை இழந்தது.
இந்தப் போட்டி குறித்து தோனியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது - ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கி ற்கு ஏதுவானது. இதில் இந்திய அணி சராசரியாக 300 ரன்னை எடுத்தது. இதில் மேலும் நன்கு ஆடி 450 ரன் எடுத் து இருக்க வேண்டும். இந்திய பேட்ஸ் மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம்.
எனவே தொடரை தீர்மானிக்கக் கூடிய 4- வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மே ன்கள் ஒருங்கிணைந்து ஆடினால் தான் வெற்றி பெற முடியும். இங்கிலாந்திற்கு எதிரான இந்த 3-வது டெஸ்டில் இந்திய பெளலர்கள் சிறப் பாக பந்து வீசினார்கள். அவர்கள் இன் னும் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து ரன் ரேட்டைக் கட்டுப் படுத்தி இருக்க வேண்டும்.
முன்னணி பந்து வீச்சாளரான ஜாஹிர் கானின் உடற்தகுதி நன்றாகவே உள்ள து. இதனால் ஒரு பிரச்சினையும் இல் லை. அவர் பந்தை நன்றாகவே ஸ்விங் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தொடரில் இந்திய அணி தொட ர்ந்து மோசமாக ஆடி வருவது குறித்து அவரிடம் கேட்ட போது, இது தொழி ல் நுணுக்கத்தின் அடிப்படையிலான பிரச்சினை ஆகும். விரைவில் இதற்கு தீர்வு காண்போம் என்றார் அவர்.
-------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்