முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆதாரம்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 11 - மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் கோர்ட்டில் அந்த நாட்டு அரசு சமர்ப்பித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் திருப்தி ஏற்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதனையொட்டி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 166 பேர் பலியானார்கள். 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனும் விசாரணைக்கு பிறகு தூக்கிலிடப்பட்டான். மேலும் மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட 7 தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 7 தீவிரவாதிகளும் மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் பாகிஸ்தான் அரசு சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில் அந்த ஆதாரங்கள் ஏற்கப்பட்டு அந்த 7 தீவிரவாதிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மன அமைதியும் திருப்தியும் ஏற்படும் என்றார். லஷ்கர் தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஆயுத பயிற்சி முகாம் மற்றும் மும்பையை தாக்கிய தீவிரவாதிகள் பயன்படுத்திய இயந்திரபடகு ஆகியவைகளின் புகைப்படங்களை இந்தியா கொடுத்தது. அவைகளை பாகிஸ்தான் புலனாய்வு ஏஜன்சி கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago