முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவும்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

போபால், டிச. - 13  - இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண் ட் செய்தது இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று இந்தி ய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான அஸ்லாம் ஷெர்கான் கருத்து  தெரிவித்து இருக்கிறார்.  இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் முறைப்ப டி தேர்தல் நடக்கவில்லை. பதவிக்காக போட்டியிடுபவர்கள் ஊழல் வாதிக ளாக உள்ளனர். அரசியல் தலையீடும் அதிகம் உள்ளது. எனவே சர்வதேச ஒலி ம்பிக் கமிட்டி, மேற்படி சங்கத்தை சஸ் பெண்ட் செய்தது.  மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநக ரான போபாலில் நிருபர்களைச் சந்தித் த ஷெர்கான் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இந்திய ஒலிம்பிக் சங்கம் விதிமுறைக ளின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதனால் ஊழல் வாதிகள் விளையாட்டுத் துறையில் நுழைவது தடுக்கப்படும். இது எதிர்காலத்தில் நா  ட்டின் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடைய உதவும் என்றும் அஸ்லாம் கூறியிருக்கிறார். 

மேலும், சீனாவிலும் கடந்த 1960 - 70 க ளில் இது போன்ற நிகழ்ச்சி நடந்தது. கம்யூனிஸ்ட் நாட்டிற்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டது. அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்த்தார்கள். அதன் பிற கு 10 வருட காலத்தில் சீனா பெரிய விளையாட்டு சக்தியாக உருவானது என்றும் கான் தெரிவித்தார்.  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை இந்திய ஒலிம்பிக் சங்கம் தான் தேர்வு செய்ய வேண்டும். இதில் அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனா ல் இந்த சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் செய்தது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதி முறைகளின் படி இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை நடத்தாமல் , டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத் திய அரசின் நிர்ப்பந்தப்படி தேர்தல் நட க்க இருந்தது. இதனால் இந்திய ஒலிம் பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட லாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், மத்திய அரசும் விளையாட்டுத் துறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காது இருந்தால் இதில் ஏராளமான ஊழல் வாதிகள் தலைவர்களாக ஆகி இருப் பார்கள் என்றும் ஷெர்கான் தெரிவித் தார். 

எனவே ஊழல் வாதிகள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விடுவது இந்திய விளையாட்டுத் துறைக்கு நல்லது என்றும், அஸ்லாம் கூறியிருக்கிறார்.

தவிர, விளையாட்டுத் துறையின் முக் கியமான பதவிக்கு வருபவர்கள் ஊழல் அற்றவர்களாகவும், சுத்தமானவர்களா கவும் இருந்தால் அது விளையாட்டுத் துறைக்கு கெளரவத்தை ஏற்படுத்தும் என்று ஒலிம்பிக் முன்னாள் வீரரான அஸ்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். 

-------------------------------------------- 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்