முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்மார்ட் நிறுவனம் சட்டத்தை மீறவில்லை அமெரிக்கா விளக்கம் கூறுகிறது

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,டிச.- 13 - வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ஆதரவு திரட்டியதில் அமெரிக்க சட்டத்தை மீறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு அமெரிக்க எம்.பிக்களின் ஆதரவை வால்மார்ட் நிறுவனம் திரட்டியது.இதற்காக வால்மார்ட் ரூ.125 கோடி செலவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இதை கடுமையாக விமர்சித்துள்ள பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியாவில் நுழைவதற்காக லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் வால்மார்ட் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர். இந்த குற்றச் சாட்டுகளை மறுத்து அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியாநுலாண்ட் வாஷிங்டனில் கூறியதாவது, இந்த விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க சட்டத்தை மீறவில்லை. இந்தியாவுக்கு இது தொடர்பாக விளக்கம் தரப்படும். இந்திய எதிர்கட்சிகளின் எதிர்ப்புதொடர்பாக பத்திரிகை வழியாக செய்திகளைப் பார்த்தோம். அமெரிக்காவில் நிறுவனங்கள் ஆதரவு திரட்டுவதைப் பொறுத்தமட்டில் இதற்கென 1995-ம் ஆண்டில் லாபிங் சட்டமே இயற்றப்பட்டுள்ளது. இதன்படி ஆதரவு திரட்டும் நிறுவனம் அதற்கான செலவுகளை நாடாளுமன்றத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே நடைமுறை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்