முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள், ஆனால் வயதான காலத்தில் கஷ்டப்படுகிறார்கள்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், டிச. - 15 - உலகிலேயே இந்தியர்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அவர்கள் ஆரோக்கியம் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிக்கையான லான்செட், 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்களைச் சேர்ந்த 486 பேரைக் கொண்டு ஆயுட்காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. 1970 ல் இருந்து 2010 ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது. உலகின் பிற நாட்டினரை விட இந்தியர்களின் ஆயுள் காலம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் 40 வயதிற்கும் மேல் வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 63 வயது வரை வாழ்கின்றனர். அதே சமயம் இந்திய பெண்கள் 67 வயது வரை வாழ்கின்றனர். அதாவது தங்களின் கணவர்களை விட கூடுதலாக நான்கரை வருடங்கள் வாழ்கின்றனராம். இந்தியர்களின் ஆயுள் அதிகமாக இருந்தாலும் வயோதிக காலங்களில் குறைவான ஆரோக்கியத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய ஆண்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 54.6 வயது வரை நல்ல ஆரோக்கியதுடன் இருப்பதாகவும், கடைசி 9 வருடங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்திய பெண்கள் தங்களின் 57.1 வருடங்கள் வரை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும், தங்களின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் தங்களின் இறுதி 10 அல்லது 10.4 வருடங்கள் குறைவான ஆரோக்கியத்தை கொண்டுள்ளனராம்.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு உயர் ரத்தஅழுத்த நோயும் ஏற்படுகிறதாம். உணவு தயாரிப்பிற்காக திடப் பொருட்களை எரிக்கும் போது கார்பன் மோனாக்சைடு, பென்சைன், பார்மால்டிஹைடு உள்ளிட்ட வேதிப் பொருட்கள் காற்றில் கலப்பதன் விளைவாக நிமோனியா, ஆஸ்துமா, பார்வை குறைபாடு, நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதாரக் கழகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் உணவில் குறைந்த அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளையே எடுத்துக் கொள்கின்றனர். குறைந்த அளவிலான பழங்கள், ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் அளவு, இரும்புச்சத்து குறைபாடு, தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு, குறைந்த உடல் உழைப்பு, மது பயன்பாடு புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகளே அவர்களின் குறைந்த ஆரோக்கியத்திற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 6.3 மில்லியன் பேர் உயிரிழப்பு புகையிலை மற்றும் புகைபிடித்தலின் விளைவாக உலக அளவில் 6.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சீனர்கள், அமெரிக்கர்கள் பிற நாட்டவர்களை விட இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகம் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவர்களின் ஆரோக்கியம் குறைவானதாக இருக்கிறது என்பது சற்றே வேதனையான விஷயம். அதேசமயம் இந்தியர்களை விட சீனர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அதிக ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்