முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மடாலயங்களுடன் சீனா மோதல் போக்கு - தலாய்லாமா கவலை

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

தர்மாசாலா,ஏப்.17 - புத்த மடாலயங்களுடன் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மிகவும் கவலை அளிக்கும்படி உள்ளது. இதை நிதானமா கையாள வேண்டும் என்று சீனா தலைமையை சர்வதேச நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய் லாமா கேட்டுக்கொண்டுள்ளார். 

திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. ஆனால் அந்த நாட்டு மக்களின் மனதில் சீனா ஒரு துளி அளவு கூட இடம் பெறவில்லை. மேலும் திபெத் நாட்டு புத்த துறவிகளும் அவர்கள் வசிக்கும் மடாலயங்களும் சீனாவுக்கு எதிராக மக்களை தூண்டி வருகிறது. திபெத் தனி நாடு என்றும் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றும் திபெத் நாட்டு மக்களும் துறவிகளும் கோரி வருகிறார்கள். மக்களிடமும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சீனாவுக்கும் திபெத்தில் உள்ள புத்த மடாலயங்களுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனையொட்டி மடாலயங்களை சுற்றி  சீன ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. திபெத்தின் வடக்கு பகுதியில் நாகபாவில் இருக்கும் கிர்தி புத்த மடாலயத்தை சுற்றிலும் சீன படை முற்றுகையிட்டுள்ளது. இதனால் பதட்டம் உருவாகி புத்த துறவிகளுக்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து துறவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தலாம்  அல்லது கைது செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. மடாலயத்திற்குள் 2500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருக்கிறார்கள். துறவிகள் மீது சீன ராணுவமே கடும் நடவடிக்கை எடுக்காமல் செய்ய சீன அதிபரை சர்வதேச நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தர்மசாலாவில் இருந்து தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்